முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி எம்.பி….!
7.5 சதவிகித சிறப்பு உள் ஒதுக்கீட்டின் கீழ் பி.இ மாணவர் சேர்க்கை ஆணை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்த கனிமொழி எம்.பி.
7.5 சதவிகித சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 50 பேருக்கு சேர்க்கை ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளார்.
இதன் மூலம், 11,000 பேர் பயன்பெறுவார்கள். உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி கல்வியின் பொற்காலமாக இந்த ஆட்சி மாற வேண்டும். கால்நடை, சட்டம், வேளாண்மை படிப்புகளில் 300 மாணவர்கள் பயன்பெற உள்ளார்கள்.
இந்நிலையில், கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பொறியியல் கல்லூரிகளில் சேரும், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதோடு, மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும் என்று அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றி. இந்த அறிவிப்பு, அனைவருக்கும் கல்வி என்ற திராவிடச் சிந்தனையை மேலும் வலுப்படுத்தும்.’ என பதிவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு, அனைவருக்கும் கல்வி என்ற திராவிடச் சிந்தனையை மேலும் வலுப்படுத்தும். (2/2)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 20, 2021