மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது. உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும். இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் மக்களவை தொகுதி வாரியாக மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் திருநெல்வேலியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “ புரியாத மொழிகளில் மத்திய அரசின் திட்டங்கள் உள்ளதோடு மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. பாஜகவுக்கு வாக்களிக்காத மக்களின் நிலை என்னவானாலும் பரவாயில்லை என மத்திய அரசு நினைக்கிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒரு பைசா நிதி கூட தராமல் மோடி அரசு வஞ்சிக்கிறது, தமிழ் பழமையான மொழி என்பது மோடி சொல்வதற்கு முன்னரே எங்களுக்கு தெரியும்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேருக்கு எதிரான வழக்குகள் ரத்து
இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாள் இந்திய நாடு வெற்றி பெறும் நாள், இந்தியா கூட்டணி, ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர வேண்டும், கோவில் கோவிலாக சென்ற பிரதமர் ஒரு முறையாவது பற்றி எரியும் மணிப்பூருக்கு செல்லவில்லை. மத்திய அரசு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை, நிறைவேற்ற போவதும் இல்லை. அறிவித்த ரூ. 15 லட்சம் என்ன ஆனது என்றும் தெரியவில்லை. நாட்டிற்கே உணவளிக்கும் விவசாயிகளை தீவிரவாதிகளை போல நடத்தும் ஆட்சி தான் மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி” என்றார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…