தமிழக உரிமைகள் பறிக்கப்படுவதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறாரா? – கனிமொழி எம்பி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் பரமன்குறிச்சியில் திமுக கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கலந்துகொண்டார்.
அதில் பேசிய அவர், திமுக இளைஞரணி செயலாளராக செயல்படும் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என பேசினார். மேலும், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் இன்று ஆளுநர் சந்தித்தததையும், ஆளுநர் செயல்பாட்டை ஆதரிப்பதாக கூறிய கருத்துக்கும் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், ‘ அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக உரிமைகள் அனைத்தும் ஆளுநரிடம் அடகு வைக்கப்பட்டிருந்தது. தமிழக உரிமைகளை ஆளுநர் பறிக்கும் செயல்பாட்டிற்கு அதிமுகவினர் பாராட்டி வருகின்றனர். என குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழக உரிமைகள் பறிக்கப்படுவதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறாரா? என கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார்.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…