தமிழக உரிமைகள் அதிமுக ஆட்சியில் அடகு வைக்கப்பட்டு இருந்தது.! கனிமொழி எம்பி விமர்சனம்.!

Default Image

தமிழக உரிமைகள் பறிக்கப்படுவதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறாரா? – கனிமொழி எம்பி கடும் விமர்சனம் செய்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் பரமன்குறிச்சியில் திமுக கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கலந்துகொண்டார்.

அதில் பேசிய அவர், திமுக இளைஞரணி செயலாளராக செயல்படும் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என பேசினார். மேலும், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் இன்று ஆளுநர் சந்தித்தததையும், ஆளுநர் செயல்பாட்டை ஆதரிப்பதாக கூறிய கருத்துக்கும் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.

 அவர் கூறுகையில், ‘ அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக உரிமைகள் அனைத்தும் ஆளுநரிடம் அடகு வைக்கப்பட்டிருந்தது. தமிழக உரிமைகளை ஆளுநர் பறிக்கும் செயல்பாட்டிற்கு அதிமுகவினர் பாராட்டி வருகின்றனர். என  குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழக உரிமைகள் பறிக்கப்படுவதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறாரா? என கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்