பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட கனிமொழி எம்.பி..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கனிமொழி எம்.பி அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்று நாடு முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் நிலையில் கனிமொழி எம்.பி அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ‘அனைவருக்கும் என்னுடைய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். பொங்கல் திருவிழா என்பதையே விவசாயிகளை உழவை கொண்டாடக்கூடிய ஒரு திருவிழாவாக தான் நாம் வழிவழியாக போற்றிக் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.
அந்த மண்ணை சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதில் ஒரு முக்கிய அங்கமாக தான் முதலமைச்சர் அவர்கள் மீண்டும் மஞ்சள் பை என்ற அந்த திட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து இந்த மண்ணை, சுற்றுப்புற சூழலை நம்முடைய எதிர்கால தலைமுறையை பாதுகாக்க கூடிய ஒரு மிகச்சிறந்த திட்டம் இந்த திட்டம்.
இந்த பொங்கல் திருவிழா என்பது ஜாதி மதங்களை கடந்து நாம் தமிழர்களாக கொண்டாடக்கூடிய ஒன்று. இந்த ஆண்டு அதை பாதுகாப்பாக கொண்டாடவேண்டும். மீண்டும் உங்கள் அத்தனை பேருக்கும் எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.’ என தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் என்னுடைய இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!#பொங்கல் pic.twitter.com/Rt77rc2Dku
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 14, 2022