தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி என்ற பெண்ணுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை பரிசளித்த கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி, இவருக்கு சைக்கிள் மீது சிறுவயதில் இருந்து ஆர்வமுடன் இருந்து வந்தார். இதன் காரணமாக மாவட்டம் மற்றும் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், இஸ்ரேலில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் “உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப்” போட்டியில் பங்கேற்பதற்கான சிறப்பு சைக்கிளை தனக்கு வழங்க வேண்டும் என கனிமொழியிடம் கேட்டுக்கொண்டிருந்தார். இதனை ஏற்ற கனிமொழி தற்போது 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான சைக்கிளை பரிசளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மூன்றாண்டுகளுக்கு முன் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வு செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி அவர்களுக்கு சைக்கிள் ஒன்றைப் பரிசளித்தேன். அதில் அவர் குழுப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும்,தனிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றதோடு, கடந்த ஜூனில் ஆசிய அளவிலான டிராக் சைக்கிளிங் குழுப் போட்டியிலும் 3-ஆம் இடத்தைப் பெற்றார். தொடர் சாதனை நிகழ்த்தி வரும் ஸ்ரீமதியை இன்று நேரில் சந்தித்து அவர் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு உகந்த சைக்கிள் ஒன்றைப் பரிசளித்தேன்., என பதிவிட்டுள்ளார்.
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய…
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…