துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய கனிமொழி எம்.பி..!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்குக் கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் நிதிக்கான காசோலையை வழங்கிய கனிமொழி எம்.பி
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்குக் கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் நிதி வழங்குமாறு முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, கனிமொழி எம்.பி இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்களின் குடும்பத்தினரிடம் காசோலைகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் திருமிகு. கீதா ஜீவன், திரு. அனிதா ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் திரு. கி.செந்தில் ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.