தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்.பி..!
கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட மாநில தேர்தல் அதிகாரியாக, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.
நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என பல தேர்தல்கள் வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல்களி சிறப்பாக நடத்தி முடிக்க, தேசிய தேர்தல் ஆணையம் மாநில அளவிலான தேர்தல் அதிகாரிகளை நியமித்திருக்கிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட மாநில தேர்தல் அதிகாரியாக, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இவருக்கு இன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் தேசிய விருது வழங்கப்படவுள்ளது.
தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுக்கு வாழ்த்து தெரிவித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என்ற பிரிவில் விருது பெறும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாகு ஐ.ஏ.எஸ். அவர்களுக்கும், அவரைப் போலவே மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரி என்ற விருது பெறும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில் ராஜ் ஐ.ஏ.எஸ், திரு. விஷ்ணு ஐ.ஏ.எஸ், திரு. பிரவீன்குமார் ஐ.ஆர்.எஸ், திரு. சிவசங்கரன் ஐ.ஆர்.எஸ் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.’ என பதிவிட்டுள்ளார்.
அவரைப் போலவே மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரி என்ற விருது பெறும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில் ராஜ் ஐ.ஏ.எஸ், திரு. விஷ்ணு ஐ.ஏ.எஸ், திரு. பிரவீன்குமார் ஐ.ஆர்.எஸ், திரு. சிவசங்கரன் ஐ.ஆர்.எஸ் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள். (2/2)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 25, 2022