பொறியியல் கலந்தாய்வு தரவரிசையில் முதலிடம் பெற்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி நேத்ராவுக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்.பி
நேற்று 2023 -2024 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழத்தில் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு மதிப்பெண் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.
இந்தாண்டு 1,87,847 ஆயிரம் பேருக்கு ரேங்க் பட்டியலிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட சுமார் 18 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு 28,425 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்று இருந்தனர். இந்தாண்டு 5,842 மாணவர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.
200க்கு 200 மதிப்பெண் பெற்று 102 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 100 பேர் மாநில கல்வி பயின்றவர்கள். இந்த மதிப்பெண் தரவரிசை பட்டியலில் திருச்செந்தூரை சேர்ந்த நேத்ரா எனும் பெண் முதலிடமும், தர்மபூரியை சேர்ந்த ஹரினிகா எனும் பெண் இரண்டாமிடமும், திருச்சியை சேர்ந்த ரோஷினி பானு மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள், பொறியியல் கலந்தாய்வு தரவரிசையில் முதலிடம் பெற்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி நேத்ரா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, பரிசளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பொறியியல் கலந்தாய்வு தரவரிசையில் முதலிடம் பெற்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி நேத்ரா அவர்களுக்கு வாழ்த்துகள். கல்வியின் துணையோடு, மாநில அளவில் சாதித்திருக்கும் மாணவியின் கனவுகள் மெய்ப்படட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…