பொறியியல் கலந்தாய்வு தரவரிசையில் முதலிடம் பெற்ற மாணவிக்கு வாழ்த்து தெரிவித்து பரிசளித்த கனிமொழி எம்.பி…!

DMK MP Kanimozhi

பொறியியல் கலந்தாய்வு தரவரிசையில் முதலிடம் பெற்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி நேத்ராவுக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்.பி 

நேற்று 2023 -2024 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழத்தில் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு மதிப்பெண் தரவரிசை  வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.

இந்தாண்டு 1,87,847 ஆயிரம் பேருக்கு ரேங்க் பட்டியலிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட சுமார் 18 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு 28,425 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்று இருந்தனர். இந்தாண்டு 5,842 மாணவர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.

200க்கு 200 மதிப்பெண் பெற்று 102 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 100 பேர் மாநில கல்வி பயின்றவர்கள். இந்த மதிப்பெண் தரவரிசை பட்டியலில் திருச்செந்தூரை சேர்ந்த நேத்ரா எனும் பெண் முதலிடமும், தர்மபூரியை சேர்ந்த ஹரினிகா எனும் பெண் இரண்டாமிடமும், திருச்சியை சேர்ந்த ரோஷினி பானு மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள், பொறியியல் கலந்தாய்வு தரவரிசையில் முதலிடம் பெற்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி நேத்ரா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, பரிசளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பொறியியல் கலந்தாய்வு தரவரிசையில் முதலிடம் பெற்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி நேத்ரா அவர்களுக்கு வாழ்த்துகள். கல்வியின் துணையோடு, மாநில அளவில் சாதித்திருக்கும் மாணவியின் கனவுகள் மெய்ப்படட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்