பொய் தகவல்களைக் கூறி பரப்புரை செய்து வருகிறார் கனிமொழி -தமிழிசை
பொய் தகவல்களைக் கூறி பரப்புரை செய்து வருகிறார் கனிமொழி என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார்.அதேபோல் திமுக சார்பாக கனிமொழி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் கனிமொழி தொடர்பாக பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பொய் தகவல்களைக் கூறி பரப்புரை செய்து வருகிறார் கனிமொழி என்று கூறியுள்ளார்.மோடி குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்றும் ஸ்டாலினால் முதல்வராக முடியாது, அவர் பரிந்துரைக்கும் ராகுலால் பிரதமராக முடியாது என்று தெரிவித்துள்ளார்.