இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டுவது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகளை அவமதிப்பது, உள்நோக்கத்தோடு மத உணர்வுகளைப் புண்படுத்துவது, அமைதியை சீர்குலைக்கும் விதமாக உள்நோக்கத்தோடு அவமதிப்பது, பொதுமக்களிடையே கலகத்தைத் தூண்டும் வகையில் கருத்து கூறுவது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் திமுக எம்.பி. கனிமொழி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் திருச்சியில் நடைபெற்ற நாத்திகர் மாநாட்டில் பேசிய கனிமொழி, திருப்பதி ஏழுமலையானுக்கே சக்தி இருக்கும்போது அவரது உண்டியலுக்கு எதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு என குறிப்பிட்டு பேசியதாக, தெலுங்கானா கரீம் நகரைச் சேர்ந்த பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பெத்தி மெஹந்தர் ரெட்டி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். தமது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறிய வழக்கை விசாரித்த கரீம்நகர் மாவட்ட நீதிமன்றம், வழக்குப் பதியுமாறு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, திரீடவுன் காவல்நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டுவது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகளை அவமதிப்பது, உள்நோக்கத்தோடு மத உணர்வுகளைப் புண்படுத்துவது, அமைதியை சீர்குலைக்கும் விதமாக உள்நோக்கத்தோடு அவமதிப்பது, பொதுமக்களிடையே கலகத்தைத் தூண்டும் வகையில் கருத்து கூறுவது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…