இந்து மதம் தமிழகத்தில் இல்லை..!கனிமொழி நறுக்
பாஜக சொல்லும் இந்து மதம் தமிழகத்தில் இல்லை. இந்து மத பாதுகாவலர் என கூற பாஜகவுக்கு உரிமை இல்லை என்று கனிமொழி காட்டமாக கூறியுள்ளார்.
ராமநாதபுரம் சந்தை திடலில் குடியுரிமை திருத்த திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற கண்டன பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், திமுக மகளிரணி தலைவி மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி குடியுரிமை சட்டத்தை எதிர்த்தவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுகிறார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒரு சட்டத்தை நிறைவேற்ற அப்படி என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பினார்.
அரசின் சொத்துகளை எல்லாம் மத்திய அரசே தனியாருக்கு விற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு யாரை எல்லாம் பிடிக்கவில்லையோ அவர்களை குடியுரிமை சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று குற்றம்சாட்டிய அவர் பெண்களுக்கான குடியுரிமையை நிரூபிக்க உரிய ஆவணங்கள் இல்லை. மத்திய அரசை எதிர்க்கும் விவசாயிகள் உள்ளிட்ட எதிர் கருத்துகள் தெரிவிக்கும் அனைவருக்கும் குடியுரிமை இல்லை என்று மத்திய அரசு சொல்லி விடும் போல இங்கு ஒருவரை பழிவாங்கக்கூடிய ஆயுதமாகவே குடியுரிமை சட்டம் செயல்படுகிறாது அவர், திருக்குறளை தேசிய புத்தகமாக அறிவிக்க மாட்டார்கள். ஏனெனில் அது தமிழில் எழுதப்பட்டதன் காரணமாக தேசிய நூலாக அறிவிக்க மாட்டார்கள். நம் அடையாள ஒற்றுமையே தமிழ்தான் அவர்களுக்கு பிடித்த நடிகர்களை எல்லாம் தேடிப் பிடித்து குடியுரிமை சட்டத்தால் ஆபத்தில்லை என்று கூறி பிரசாரம் செய்கின்றனர். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்றதால் மத்தியில் ஆளும் அரசு நினைத்ததை எல்லாம் நிறைவேற்ற திட்டமிடுகிறது பாகிஸ்தானை பற்றியே எந்நேரமும் பேசிக்கொண்டும் யோசித்து கொண்டும் இருப்பவர் பிரதமர் மோடி ஒருவர் தான் என்று விமர்சித்தார் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருளாதாரம் மேம்படும் என்று எண்ணி வாக்களித்த பெரும்பான்மை இந்துக்களுக்கு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார்.பாஜக சொல்லிக்கொண்டிருக்கும் இந்து மதம் தமிழகத்தில் இல்லை. இந்து மத பாதுகாவலர் என கூற பாஜகவுக்கு உரிமையும் இல்லை குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை மற்றொரு விடுதலை போர் என்று குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.