கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் வகுப்புகளை தொடங்க பள்ளி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் தொடங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மற்ற வகுப்புகளை தொடங்குவது குறித்து ஒரு மாதத்திற்கு பிறகு முடிவெடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து கடந்த ஜூலை 17-ஆம் தேதி வன்முறை ஏற்பட்ட நிலையில்,அன்று முதல் பள்ளி மூடப்பட்டது. இதனையடுத்து பள்ளி சீரமைப்பு பணி சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது.
இந்த சமயத்தில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டதால் மீண்டும் திறக்க கோரி பள்ளி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளை தொடங்கலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பள்ளி உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 21க்கு ஒத்திவைக்கப்பட்டது. கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் பள்ளி நிர்வாகம் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…