கந்தசஷ்டி விவகாரம் ! தமிழக அரசை ரஜினி பாராட்டியுள்ளார் – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Default Image

கந்தசஷ்டி விவகாரத்தில் ரஜினி தமிழக அரசைப் பாராட்டி உள்ளார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது.இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 500 வீடீயோக்களை நீக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்,கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து ,பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.இனிமேலாவது மதத்துவேசமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்..ஒழியனும் .எல்லா மதமும் சம்மதமே , கந்தனுக்கு அரோகரா என்று பதிவிட்டார். இந்நிலையில் இது குறித்து அமைச்சர் உதயகுமார் கூறுகையில்,  கந்தசஷ்டி விவகாரத்தில் ரஜினி தமிழக அரசைப் பாராட்டி உள்ளார் என்று  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - TN Rain
VCK Leader Thirumavalavan - TVK Leader Vijay
Sunil Gavaskar
Bengaluru
Lokesh Kanagaraj - Vijay
mugamathu kaif about pant
Donald Trump - Kamala Haaris