களைகட்டும் கந்தசஷ்டி சூரசம்ஹார நிகழ்வு.! பழனி, திருச்செந்தூர் கோயில்களுக்கு படையெடுக்கும் பக்தர்கள்.!
கந்தசஷ்டி விழாவின் 6வது நாளான இன்று சூரசம்கார நிகழ்வு நடைபெற உள்ளது. அதற்காக திருச்செந்தூர், பழனி கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை : கந்தசஷ்டி திருவிழாவின் விரத முறைகள், சிறப்பு பூஜைகள் கடந்த நவம்பர் 2ஆம் தேதி தொடங்கியது. திருச்செந்தூர் முருகன் கோயில், பழனி முருகன் கோயில் போன்ற பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் யாக சாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது.
இந்த கந்தசஷ்டியின் 6ஆம் நாளான இன்று (நவம்பர் 7) உச்சநிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் , சூரனை , கடவுள் முருகன் வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும். இதனை காண திருச்செந்தூரில் நேற்று முதலே பக்த்ர்கள் கூட்டம் கூட்டமாக குவிய தொடங்கினர்.
இன்று அதிகாலை இன்னும் அதிகமாக பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயில் , கடற்கரைகளில் குவிந்து வருகின்றனர். பாதுகாப்புக்கு நெல்லை , தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து சுமார் 4,500 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கார், வேன் உள்ளிட்டவை ஊருக்கு வெளியே 20க்கும் மேற்பட்ட பார்க்கிங் அமைத்து, அங்கே நிறுத்தப்பட்டு கூட்ட நெரிசலை காவல்துறையினர் முறைப்படுத்தி வருகின்றனர்.
இன்று மாலை 4.30 மணியளவில், திருச்செந்தூர் கந்தசஷ்டி மண்டபத்தில் இருந்து முருகப்பெருமான் சூரனை வதம் செய்ய புறப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை பக்தர்கள் தெளிவாக காண திருச்செந்தூர் கடற்கரையில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கூட்டம் முறைப்படுத்தப்பட்டு வருகிறது.
திருச்செந்தூரை போல, பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலிலும் கந்தசஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை முதலே சூரசம்கார நிகழ்வை காண பக்தர்கள் மலையேறி வருகின்றனர். அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.