காஞ்சிபுரம் கோயில் உண்டியல் பணம் மழையில் நனைந்து சேதம்.!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உண்டியல் பணம் மழைநீரில் நனைந்து சேதமடைந்துள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், மழைநீர் உண்டியலில் புகுந்ததால் ரூபாய் நோட்டுகள் நீரில் நனைந்து சேதமாகியுள்ளது. ஏகாம்பரநாதர் கோயில் உண்டியலில் ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, நனைந்த நிலையில் ரூபாய் நோட்டுக்கள் கிடைத்துள்ளன.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மூலஸ்தானம், அருகிலுள்ள உண்டியலில் மழைநீர் புகுந்து தேங்கியிருந்ததால் ரூபாய் நோட்டுகள் நனைந்துள்ளன.