காஞ்சிபுரத்தில் மது வாங்க 3 கி.மீ தூரத்திற்கு காத்திருந்த கூட்டம் !
காஞ்சிபுரத்தில் மதுபானம் வாங்க 3 கி.மீ தூரத்திற்கு காத்திருந்த கூட்டம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு வரும் மே 17ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டது. இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்துள்ளனர்.
தமிழக அரசு வரும் 7ம் தேதியில் இருந்து மதுக்கடைகள் திறக்கப்படும் என்றனர். அதன்படி தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டது. மதுபானங்களை வாங்க மக்கள் அனைவரும் தனிநபர் இடைவெளியுடனும் முகக்கவசம் அணிந்தும் வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பு பெருமளவில் உள்ளதால் அங்கு மதுக்கடைகள் திறக்க தடை விதித்துள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் மற்றும் கீழ்கதிர்பூர் பகுதியில் இருக்கும் மதுக்கடையில் தனிநபர் இடைவெளியுடன் 3 கி.மீ தூரத்திற்கு மக்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.