கேட்பார் அற்று கிடந்த பெட்டி…!பீதியில் மக்கள்..!அதிர்ச்சியான வெடிகுண்டு நிபுணர்கள்..!
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த ரத்தினமங்கலத்தில் ஒரு பெட்டி கேட்பாரற்றுக் கிடந்துள்ளது.இதனை கண்ட மக்கள் பீதி அடைந்தனர்.எனவே இந்த தகவல் அறிந்த வெடி குண்டு நிபுணர்கள் ஆய்வில் இறங்கினர் .அப்போது பெட்டியை எடுத்து பார்க்கும் போது உள்ளே இருந்த பொருளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வெடிகுண்டு நிபுனர்கள் பெட்டியை திறந்து பார்க்கும் போது உள்ளே பித்தளைக்குடம் ஒன்று இருந்துள்ளது. மக்களுக்கு பீதி ஏற்படுத்துவதற்காக சில விஷமிகள் காலி குடத்தை வைத்து பெட்டியை தயாரித்து வைத்துள்ளனர் என்று இந்த பெட்டியை ஆய்வு செய்த வெடிகுண்டு நிபுணர்கள் தகவல் தெரிவித்தனர்.இதனால் அந்த பகுதி சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது