காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார. திங்கள்கிழமை பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், அதற்காக ஆயுத்த பணிகளை மேற்கொள்வதற்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உத்தரவில் மாற்றம் செய்து அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.