கமர்கட் தந்து காது கம்மலை திருடியது திமுக – தமிழிசை காட்டம் !
பொய்யான வாக்குறுதிகள் என்னும் கமர்கட் தந்து காது கம்மலை திருடியது திமுக என்று தமிழிசை கூறியுள்ளார். திமுக ஊழல் விஞ்ஞானிகள் நிறைந்த கட்சி என்றும் காட்டமாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினை குறிப்பிட்டு இன்று அறிக்கை விட்ட அவர், மத்திய அமைச்சரவையில் அவை குறிப்பில் இடம் பெறாத கோஷங்கள், மனுக்கள் ஆகியவற்றை திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்ததாய் பெருமை கொள்வது நியாயம் தானா என்று குறிப்பிட்டுள்ளார். அதே போல் ஏற்கனவே இருக்கும் ரயில்வே ஊழியர்களின் மொழி பயன்பாட்டு அரசணையை உடனே கொண்டு வந்தது மத்திய அரசு. இதையும் தான் செய்ததாக கூறுவது வீண்ஜெயம். பொய்யான வாக்குறுதி என்னும் கமர்கட் தந்து கம்மலை திருடுவது போல் உள்ளது என்று கூறியுள்ளார்.