காமராஜரும் பிரதமர் மோடியும் ஒன்னா.? திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
சமீபத்தில் காமராஜருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு அதிமுகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்தவகையில், கர்மவீரர் காமராஜரும் பிரதமர் மோடியும் ஒன்னா.? என்பது பொதுமக்களுக்கே நன்றாகவே தெரியும் என அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
திண்டுக்கலில் புதிதாக சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசனிடம், காமராஜருடன் மோடியை ஒப்பிட்டு அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், காமராஜர் யார்..? மற்றவர்கள் யார்..? காமராஜர் எப்படிப்பட்டவர், மற்றவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும்.
திருச்சியில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி.! 14 இடங்களில் அனுமதியில்லை
இதுகுறித்து நான் கூற வேண்டிய அவசியம் இல்லை என பதிலளித்தார். இதற்கு முன் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது, கூட்டணி விலகல் தொடர்பாக அண்ணாமலை கூறியது, அவருடைய கட்சியின் கருத்தை தெரிவித்திருக்கிறார். பாஜகவில் இருந்து நாங்கள் ஏன் வெளியே வந்தோம் என்பதை எங்கள் வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாகத் தெரிவித்து இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காரணத்தை சொல்லியிருக்கிறோம். திருப்பித் திருப்பி கூற வேண்டிய அவசியம் கிடையாது. ஏன் வெளியே வந்தோம் என தமிழக மக்களுக்கும், அதிமுகவினருக்கும் நன்றாக தெரியும் என்று தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஓட்டு எண்ணும்போது தான் தெரியும், அதுவரை யாரு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் தான் எந்த கட்சி எங்கங்கே உள்ளது என்பது தெரியவரும். எனவே, நாங்கள் பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்து விட்டோம். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து எதிர்கொள்வோம் என்றும் அயோத்தி கோயில் திறப்பு விழாவிற்கு செல்வது குறித்து அப்போதைய சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.