தந்தைக்காக நடனமாடி வாக்கு சேகரித்த கமல் மகள்., வைரல் வீடியோ..!
கமல் மகள் அக்ஷராஹாசன், அண்ணன் மகள் சுஹாசினி ஆகியோர் கோவையில் கமலுக்கு ஆதரவாக இருவரும் நடனமாடி வாக்கு சேகரித்தனர்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். பிரசாரம் செய்ய இன்று இரவு 7 மணி வரை மட்டுமே என்பதால் கோவை தெற்கு தொகுதியில் பல இடங்களில் கமல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
நடனமாடி தந்தைக்காக வாக்கு சேகரித்த கமல் மகள்..!#MNM #TNElection2021 pic.twitter.com/XiWG4f2pMu
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) April 4, 2021
இதற்கிடையில், கமல் மகள் அக்ஷராஹாசன், அண்ணன் மகள் சுஹாசினி ஆகியோர் கோவையில் கமலுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது, அக்ஷரா, சுஹாசினி இருவரும் நடனமாடி வாக்கு சேகரித்தனர்.