கமல்ஹாசன் உடல் நிலை சீராக உள்ளது – மருத்துவமனை..!

நடிகர் கமல்ஹாசன் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளிடப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பயணத்தை முடிந்துவிட்டு நாடுதிரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து கமல் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கமல்ஹாசன் கூறினார்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் சிசிக்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளிடப்பட்டுள்ளது. நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் குணடைந்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மருத்துவமனை தரப்பில் இருந்து பிற்பகல் 2 மணி அளவில் வெளியிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025