அதிமுகவை வீழ்த்த தான் விஜய்யை கூப்பிடுகிறாரா கமல்? என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.
மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.இதேபோல் அவர் கட்சிகளையும் நேரடியாகவும் சாடி வருகின்றார்.
இந்நிலையில் சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் கற்பனை கேள்விகளை தொகுப்பாளரான நடிகர் பிரசன்னா கேட்டார் .அதற்கு பதில் அளித்த நடிகர் விஜய்,சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை, நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்.மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை.மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால், மாநிலம் தானாகவே நல்லதாக இருக்கும்.நான் முதல்வரானால் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன் ; ஆனால் முடியுமா என தெரியவில்லை.நெருக்கடி ஏற்பட்டால் இயற்கையாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள். அவர்கள் அமைப்பார்கள் நல்ல சர்க்கார் என்று அதிரடியாக பேசினார்.இந்நிலையில் விஜய்யின் இந்த பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
நேற்று சேலத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.அப்போது அவர் கூறுகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில், நடிகர் விஜய் சேர விரும்பினால், அவருக்கு இடம் உண்டு என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உறுதியாக தெரிவித்தார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இவ்வாறு கூறியது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஏனென்றால் கமல் கூறியதை ஒரு சில ரசிகர்கள் ஏற்றாலும் ஒரு சில ரசிகர்கள் கமல் மீது வெறுப்பில் உள்ளனர்.இது ஒரு புறம் இருக்க அதிமுகவை வீழ்த்த தான் விஜய்யை கூப்பிடுகிறாரா கமல்? என்ற கேள்வியும் வெகுவாக எழுந்துள்ளது.
இது வரை கமல் விமர்சனம் செய்ததை பார்த்தால் அவர் அதிகமாக அதிமுகவை தான் அதிகம் விமர்சித்துள்ளார்.இதற்கான காரணத்தை நாம் இனி வரும் காலங்களில் தான் பார்க்க வேண்டும்.
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…