கமலின் புதிய திட்டம் …!அதிமுகவை வீழ்த்த விஜய்க்கு ஸ்கெட்ச் போடும் கமல்ஹாசன் …!கட்சியில் இணைக்க போராடும் கமல்…!

Default Image

அதிமுகவை வீழ்த்த தான் விஜய்யை கூப்பிடுகிறாரா கமல்? என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.
Image result for kamal hassan vijay
நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.
 

மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.இதேபோல் அவர் கட்சிகளையும் நேரடியாகவும் சாடி வருகின்றார்.
Image result for kamalhassan vijay
 

இந்நிலையில் சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் கற்பனை கேள்விகளை தொகுப்பாளரான நடிகர் பிரசன்னா கேட்டார் .அதற்கு பதில் அளித்த நடிகர் விஜய்,சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை, நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்.மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை.மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால், மாநிலம் தானாகவே நல்லதாக இருக்கும்.நான் முதல்வரானால் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன் ; ஆனால் முடியுமா என தெரியவில்லை.நெருக்கடி ஏற்பட்டால் இயற்கையாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள். அவர்கள் அமைப்பார்கள் நல்ல சர்க்கார் என்று அதிரடியாக பேசினார்.இந்நிலையில் விஜய்யின் இந்த பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
Related image
 
நேற்று சேலத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.அப்போது அவர் கூறுகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில், நடிகர் விஜய் சேர விரும்பினால், அவருக்கு இடம் உண்டு என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உறுதியாக தெரிவித்தார்.
இந்நிலையில்  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இவ்வாறு கூறியது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஏனென்றால் கமல் கூறியதை ஒரு சில ரசிகர்கள் ஏற்றாலும் ஒரு சில ரசிகர்கள் கமல் மீது வெறுப்பில் உள்ளனர்.இது ஒரு புறம் இருக்க அதிமுகவை வீழ்த்த தான்  விஜய்யை கூப்பிடுகிறாரா கமல்? என்ற கேள்வியும் வெகுவாக எழுந்துள்ளது.
இது வரை கமல் விமர்சனம் செய்ததை பார்த்தால் அவர் அதிகமாக அதிமுகவை தான் அதிகம் விமர்சித்துள்ளார்.இதற்கான காரணத்தை நாம் இனி வரும் காலங்களில் தான் பார்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest