ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சி பெயர் அறிவிப்பா? கமல் விளக்கம் ….
ராமநாதபுரத்தில் பிப்ரவரி 21ம் தேதி அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக கூறிய கமல்ஹாசன், பிப்ரவரி 24ம் தேதி மாநாடு நடத்தப்படாது என தெரிவித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் தமது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். பின்னர், தமது இல்லத்துக்கு வெளியே கூடியிருந்த ரசிகர்களிடையே உரையாற்றிய நடிகர் கமல்ஹாசன், மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமது அரசியல் பயணத்தில் இன்னும் பலர் இணைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சி பெயரை அறிவித்து, மக்களைச் சந்திக்க இருப்பதாகவும் கூறினார். பிப்ரவரி 24ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்த இருப்பதாக வெளியான தகவல் வெறும் புரளி என்றும், பிப்ரவரி 21 முதல் 3 நாட்களுக்கு மக்களை சந்திக்க இருப்பதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….