மத்திய அரசின் 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இதனை சரிசெய்ய பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இந்த 20 லட்சம் கோடி எதற்கெல்லாம் ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்த 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், 20 லட்சம் கொடியில் தமிழகத்திற்கு என்ன பயன்? நிதியுதவியை நியாமாக கேட்காமல், டாஸ்மாக் திறந்து மக்களின் உயிரை பணயம் வைத்து பணம் பறிக்கும் இந்த அரசு அம்மா அரசு இல்லை அடிமை அரசு என பதிவிட்டுள்ளார்.
அவர் டிவிட்டர் பதிவில், ’20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு.’ என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…