போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? – கமல்ஹாசன் கேள்வி!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நாடுமுழுவதும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வின்றி திறம்பட செயல்பட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் கையுறை, முககவசம் போன்ற மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவிற்கு இல்லை என குற்றசாட்டு கூறப்பட்டு வருகிறது, இந்த தேவையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், மருத்துவ ஊழியர்களுக்கு தேவையான உபகரணங்கள் இல்லாமல் பணி செய்ய கோருவது, ஆயுதமின்றி போருக்கு அணுத்துவது போல என கூறி பதிவிட்டுள்ளார்.
அந்த டிவிட்டர் பதிவில், ‘ போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 30, 2020
தமிழக முதல்வர் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில்,1.50 கோடி முகக்கவசங்கள், 25 லட்சம் N95 முகக்கவசங்கள் ஆகியவை ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025