திமுகவுக்கு ஆதரவு.. மக்களவையில் நான் போட்டியிடவில்லை.! – கமல்ஹாசன் அறிவிப்பு.!
DMK-MNM : மக்களவை தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவர்த்தையில் பிரதான கட்சிகள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் , விசிக, மதிமுக, முஸ்லீம் லீக் கட்சிகளை தொடர்ந்து இன்று மக்கள் நீதி மய்ய கட்சியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
Read More – திமுக கூட்டணியில் தொடரும் இழுபறி… காங்கிரஸ் தேசிய தலைவர்கள் சென்னை வருகை.!
மநீம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று திமுக தலைமை அலுவலகம் வந்து இருந்தார். அவர் திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் ஆலோசனை நடத்தி பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் கூறுகையில், வரும் மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மநீம தொண்டர்கள் திமுகவுக்கு ஆதரவு அளித்து வேலை செய்வார்கள் என்றும், மக்களவை தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடவில்லை என்றும் தெரிவித்தார்.
Read More – எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் 5 உத்திரவாதங்கள் இதுதான்.! ப.சிதம்பரம் விளக்கம்.!
மேலும், திமுக உடனான கூட்டணி ஒப்பந்தத்தின் படி , மக்கள் நீதி மையத்திற்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என அதிகாரபூர்வமாக மநீம கட்சியினர் தெரிவித்தனர்.