உலகநாயகனுக்கு எதிராக அரசியல் களத்தில் களமிறங்க உள்ள கௌதமி?! எந்த கட்சிக்கு தெரியுமா?

Default Image
  • கமலுடன் நிறைய படங்களில் ஜோடியாக நடித்த கௌதமி. பத்து வருடங்களாக கமலுடன் துணைவியாக இருந்துள்ளார். 
  • பின்னர் கமலை பிரிந்து தற்போது சில அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

உலகநாயகன் கமலஹாசன் உடன் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை கவுதமி. இவரும் கமலும் இருவரும் பத்து வருடங்களுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். பின்னாளில் சில வருடங்களுக்கு முன்னர் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பின்னர் கௌதமி சில சின்னத்திரை விழாக்களில் கலந்து கொண்டார். ஆனால் அதன்பிறகு அடுத்து அவர் எதிலும் கலந்துகொள்ளவில்லை.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதன் பின்னர் தமிழக பாஜக ஏற்படு செய்த சில நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், வருகிற உள்ளாட்சி தேர்தலில் தமிழக பாஜக சார்பாக அவருக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.

ஒருவேளை கமலின் கட்சிக்கு எதிராக தமிழக பாஜகவின் முக்கிய பொறுப்பில் நடிகை கௌதமி அமர்த்தப்படுவர் என அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவி வருகிறது. கமலுக்கு எதிராக தமிழக பாஜகவில் கௌதமியை களமிறக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்