கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் சாதனையாளராக இருக்கலாம், அரசியலில் ஜீரோதான் என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கோயம்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தைப் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? அவர் சினிமாவில் வேண்டுமானால் சாதனையாளராக இருக்கலாம், அரசியலில் ஜீரோதான் என விமர்சித்துள்ளார். Retired ஆன பின் அரசியலுக்கு வந்துள்ளார் கமல்ஹாசன். நான் 46 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் கூறினார்.
இதையடுத்து, திமுக ஆட்சியில் அவசர கோலத்தில் ஆரம்பித்து கைவிடப்பட்ட பாலப் பணிகளை அதிமுக அரசு நிறைவேற்றியது. திமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் சென்னையில் 86 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் தற்போது 15 பாலங்கள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. ஊழலுக்கு சொந்தகாரர்களே திமுகவினர்தான் என்றும் விமர்சித்துள்ளார். சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தயாரா? என்று முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், புகாரில் சிக்கிய துரைமுருகன் அதிமுக அரசை விமர்சிப்பதா? வருமான வரித்துறை சோதனை நடத்தி ரூ.10 கோடிக்கு மேல் கைப்பற்றி உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளது. திரைமறைவில் டெண்டர் கொடுத்தது திமுக ஆட்சியில் தான். மின்னணு டெண்டர் முறையில் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை. முக ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் உள்ளிட்டோர் ஆளுநரிடம் பொய்யான ஊழல் புகாரை கொடுத்துள்ளனர் என முதல்வர் பழனிசாமி குற்றசாட்டியுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…