மக்கள் உயிர் மீது அக்கறை இல்லாதவர் கமல், நாங்கள் அப்படியல்ல என அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று தமிழகத்திலும் அதிக அளவில் இருப்பதால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் கிராம சபைகள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அண்மையில் இது குறித்து பேசிய தமிழ் திரையுலக நடிகரும், மக்கல் நீதி மைய கட்சி தலைவருமாகிய கமல் அவர்கள் கிராம சபை கூட்டம் நடத்தாததற்கு காரணம் கொரோனா காலகட்டத்திற்குரிய வரவு செலவு கேட்கப்படும் என்ற அச்சத்தில் தான் போல என கூறியிருந்தார்.
இது குறித்து அமைச்சர் ஓ எஸ் மணியன் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது அதற்கு பதிலளித்தஓ.எஸ்.மணியன் அவர்கள், கமலஹாசன் மக்களின் உயிர் மீது அக்கறை இல்லாதவர் கொரோனா ஊரடங்கு போடப்பட்டு இருப்பதாலும், மக்கள் உயிர் மீது எங்களுக்கு அக்கறை இருப்பதாலும் தான் கிராமசபை கூட்டங்கள் நடத்தப் படவில்லை. எனவே மக்கள் மீது அக்கறை இல்லாத தலைவர்கள் பேசக்கூடிய பேச்சுதான் இது என கமலை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப்…
சென்னை : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…