தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கமல் – விஜய் பிறந்த நாள் வாழ்த்து.!
MK Stalin: தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
READ MORE – முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்.! தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை.! பிரதமர் மோடி, கார்கே வாழ்த்து.!
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர்,திரு.ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்’என்று குறிப்பிட்டுள்ளார்.
READ MORE – பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
அதே போல தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தலைவர் விஜய் தனது கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில், ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
READ MORE – அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு!
இதனிடையே, தனது 71-வது பிறந்த நாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும், அண்ணா அறிவாலயத்தில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.