அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பழிவாங்குகிறது.! டாஸ்மாக் திறப்பு.! கமல் கண்டனம்.!
தமிழகம் முழுவதும் (சென்னை தவிர) டாஸ்மாக் மதுபான கடைகள் வரும் 7ஆம் தேதி முதல் குறிப்பிட்ட நேரக்கட்டுப்பாடு மற்றும் விதிகளுக்குட்பட்டு திறக்கப்படும் என அரசு அறிவித்ததை அடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையான கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதிலும் தலைநகர் சென்னை தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நகரமாக மாறி வருகிறது. இந்த கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதாவது கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் வரும் 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்தது.
அரசின் இந்த முடிவு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையான கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், ‘ கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, தற்போது டாஸ்மாக்கை திறக்க போகிறதாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா?’ என பதிவிட்டுள்ளார்.
சென்னையில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டு வருவதால், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்
கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம்.
அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.— Kamal Haasan (@ikamalhaasan) May 5, 2020
கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.