ஆலந்தூரில் இருந்து 2-ம் கட்ட பரப்புரையை தொடங்கும் கமல்..!
தனது 2-ம் கட்ட பரப்புரையை கமல்ஹாசன் இன்று சென்னை ஆலந்தூர் தொகுதியில் இருந்து தொடங்குகிறார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீடு என தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 2-ம் கட்ட பரப்புரையை இன்று தொடங்குகிறார்.
தனது 2-ம் கட்ட பரப்புரையை கமல்ஹாசன் சென்னை ஆலந்தூர் தொகுதியில் இருந்து தொடங்குகிறார். எம்.ஜி.ஆர் முதன் முதலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பரங்கிமலை தற்போது ஆலந்தூர் தொகுதியில் உள்ள நிலையில், அங்கு கமல்ஹாசன் பரப்புரையை மேற்கொள்கிறார். 2-ம் கட்ட பரப்புரையை தொடங்குவதற்கு கமல்ஹாசன் முன் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் கமல்ஹாசன் முதற்கட்ட பரப்புரையை மதுரையில் தொடங்கி தமிழ்கத்தின் பல இடங்களில் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.