இன்று மாலை நடிகர் ரஜினிகாந்தை கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாக அறிவித்த நிலையில்,கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அண்மையில் அறிவித்தார்.ரஜினியின் இந்த முடிவிற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் ரஜினியின் திரையுலக நண்பராக அறியப்படும் ,மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்தார்.மயிலாடுதுறையில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் கமல் பேசுகையில்,என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என்று கூறினார்.மேலும் ரஜினி அரசியல் நிலைப்பாடு குறித்து கூறுகையில்,ரஜினி ரசிகர்கள் நிலைதான் எனக்கும்,ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது.பிரசார பயணம் முடிந்து ரஜினியை சந்திப்பேன், சந்தித்த பின் உங்களுக்கு நான் சேதி சொல்கிறேன் என்று கூறினார்.மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கமல் பேசுகையில், அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது என் நண்பரான ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன் என்று பேசினார்.
இந்நிலையில் இன்று மாலை நடிகர் ரஜினிகாந்தை கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரஜினியிடம் ஆதரவு கேட்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…