கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. ஏற்கனவே முதற் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், இன்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது.
அதில், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்பது பழமொழி; ஆனால் ஊழல் கோட்டையாக இருக்கும் கொங்குவை மாற்ற நான் போட்டியிடுகிறேன் என தெரிவித்தார்.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக கமல்ஹாசன் போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் திமுக, அதிமுக போட்டியிடவில்லை. இங்கு பாஜக, காங்கிரஸ் ,நாம் தமிழர் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனர்.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்..? என்று இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…