விபத்து நிகழ்ந்த இடத்தில் கமல் ஆஜராக அவசியமில்லை -உயர்நீதிமன்றம் உத்தரவு
சம்பவ இடத்தில் கமல்ஹாசன் ஆஜராகி விளக்கம் அளிக்க தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் இறந்தது பற்றி கமல்ஹாசனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்தது.இன்று இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறை துன்புறுத்துவதக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில், துயர சம்பவம் நடந்த இடத்திற்கே தன்னை அழைத்து விபத்து தொடர்பாக நடித்து காட்டுமாறு காவல்துறையினர் துன்புறுத்துகிறார்கள் என்று தெரிவித்தார் .கமல்ஹாசனின் மனுவை அவசர வழக்காக எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது .
இந்நிலையில் வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில்,இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து நடந்த இடத்திற்கு நடிகர் கமல் நாளை நேரில் ஆஜராக தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தேவைப்பட்டால் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் முன்பு ஆஜாராகலாம் என்றும் தெரிவித்துள்ளது.