கமல்ஹாசன் கூட்டத்தில் காலணி, முட்டை வீச்சு என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்-திருமாவளவன்
கமல்ஹாசன் கூட்டத்தில் காலணி, முட்டை வீச்சு என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசிவிட்டு கீழிறங்கும் போது முட்டை,காலணி வீசப்பட்டது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில், கமல்ஹாசன் கூட்டத்தில் காலணி, முட்டை வீச்சு என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் .தமிழக அரசியல் அநாகரிகத்தின் களமாக மாறிவருவது கவலையளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.