இன்று ஈழத் தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது.இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்கலந்துகொண்டார்.அப்போது சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.விடுதலை புலிகள் அமைப்பிற்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிக்கப்பட்டது குறித்து சீமான் பேசினார்.
அவர் கூறுகையில்,இது வழக்கமாக இந்திய அரசாங்கம் செய்வதுதான்.கடந்த முறை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு தேர்தல் நேரத்தில் தான் அவசர அவசரமாக தடைவிதித்தனர்.அதே தான் தற்போது உள்ள பாஜக அரசும் விடுதலை புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகள் தடை செய்துள்ளது.மேலும் இது தமிழின மக்களுக்கு எதிரான தடை என்று தெரிவித்தார்.
மேலும் கமல் பேசியது குறித்து அவர் கூறுகையில்,கமல்ஹாசன் பேசியது வரலாற்று உண்மை ஆகும்.பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கமல் ஹாசனின் கருத்தை வைத்து சுயலாபதிற்காக அரசியல் செய்கின்றனர் .கேட்சோவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை சேர்ந்தவர் தான்.அதை இல்லை என்று கூற சொல்லுங்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…