கமல்ஹாசன் மொத்த சொத்து மதிப்பு ரூ.176 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், அரசியல் கட்சியினர் ஒருபுறம் வேட்புமனு தாக்கல் மறுபுறம் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். வேட்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, நேற்றைய நாள் முகூர்த்த நாளாக இருந்ததால் பல முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று மட்டும் முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டிடிவி தினகரன், கமல்ஹாசன், வானதி சீனிவாசன், சீமான், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடம் நடிகர் கமல்ஹாசன் தனது சொத்து மதிப்பு விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதில், கமல்ஹாசனுக்கு தமிழகம் மற்றும் லண்டனில் சொத்து இருப்பது வேட்புமனுவில் தெரியவந்துள்ளது. 45 கோடியே 9 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்து இருப்பதாகவும், 131 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 49.50 கோடி கடன் இருப்பதாகவும், 2.7 கோடி மதிப்பில் லெக்சஸ் மாடல் காரும், 1 கோடி மதிப்பில் பிஎம்டபுள்யூ காரும், லண்டனில் 2.50 கோடி மதிப்பில் வீடும் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர்…