விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு !டெல்லிக்கு விரைந்த 10 பேர் கொண்ட குழு

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் உத்தரவின் பேரில் 10 பேர் கொண்ட குழு டெல்லி விரைந்தனர்.
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இவர்களின் போராட்டம் தொடர்ந்து 11-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒரு சில எதிர் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.மத்திய அரசு மற்றும் விவசாய அமைப்புகள் சார்பாக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.ஆகவே டெல்லியில் விவசாயிகள், மத்திய அரசு இடையேயான பேச்சுவார்த்தை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஆனால் பேச்சுவார்த்தைக்கு 9-ஆம் தேதி அழைப்பு விடுத்த நிலையில் ,வருகின்ற 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது.மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் உத்தரவின் பேரில் மக்கள் நீதி மய்யத்தின் விவசாய அணி மாநில செயலாளர் மயில்சாமி தலைமையில் 10 பேர் கொண்ட குழு இன்று காலை டெல்லி சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவை தெரிவிக்கும்படி குழுவினரிடம் அறிவுறுத்தியுள்ளார் கமல்ஹாசன்.
Press Release regarding Supporting Farmers’ Protest at Delhi.#PressRelease #MakkalNeedhiMaiam #தலைநிமிரட்டும்தமிழகம்#சீரமைப்போம்தமிழகத்தை#ReImaginingThamizhNadu pic.twitter.com/TVrKHyjP2G
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 6, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025