மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.
மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.
இதன் பின் டிசம்பர் 22 ஆம் தேதி நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது . ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் உறுப்பினர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
இதன் பின்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளனர். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கும் 575 க்கும் மேற்பட்ட தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…