கமல் ஒருநாளும் முதல்வராக முடியாது.. ரஜினி அரசியலுக்கு வர மாட்டார்: கமல் சகோதரர் சாருஹாசன் அதிரடி பேச்சு
- கமல்ஹாசன் ஒருநாளும் முதல்வராக முடியாது என அவரது சகோதரரும், நடிகருமான சாருஹாசன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த சாருஹாசன், அரசியல்வாதியாக கமல்ஹாசனால் சாதிக்க இயலாது. அவரால் ஒருநாளும் முதல்வராக முடியாது. ரஜினியை பொறுத்தவரை அவருக்கு பெரிய வீழ்ச்சியாக இருக்கும். 100 சதவீதம் நிச்சயமாக அவர் அரசியலுக்கு வர மாட்டார். அவரது வார்த்தையை விரைவில் அவர் திரும்பப் பெற்றுக் கொள்வார்
கமல், ரஜினி ஆகிய இருவரும் வெற்றிகரமான நடிகர்களாக இருக்க முடியும். ஆனால், எதிர்காலத்தில் அவர்கள் நிறைய இழக்க வேண்டியிருக்கும். சினிமா ஆபத்தானது என்றால், அரசியல் அபாயகரமானது என்றார்.