கமலஹாசன் விரைவில் வீடு திரும்புவார்…! – வைரமுத்து ட்வீட்

Default Image

கட்டுறுதி மிக்கஉடல் கல்லுறுதி மிக்கமனம் மருத்துவ மகத்துவம் வேறென்ன வேண்டும்? விரைவில் வீடு திரும்புவார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, கமல்ஹாசன் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக இராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடபட்டது.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கலைஞானி கமல்ஹாசனைத் தொலைபேசியில் அழைத்து நலம் கேட்டேன் நடந்தவை – நடப்பவை சொன்னார் குணம்பெற வாழ்த்தினேன் கட்டுறுதி மிக்கஉடல் கல்லுறுதி மிக்கமனம் மருத்துவ மகத்துவம் வேறென்ன வேண்டும்? விரைவில் வீடு திரும்புவார்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan
DMK - Revanth Reddy
udhayanidhi stalin annamalai
annamalai ptr