பேரறிஞர் அண்ணா – திராவிடப் பெருங்கனவு கண்டு, தமிழர் நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியவர் – கமல்ஹாசன் ட்வீட்.
பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்தவகையில் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், பேரறிஞர் அண்ணா – திராவிடப் பெருங்கனவு கண்டு, தமிழர் நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியவர். சமூக நீதிக் கொள்கைகளை அரசியல் சட்டமாக்கி, சமநீதி சமத்துவச் சீர்திருத்தம் தந்தவர். தமிழக அரசியலில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி, அரசியல் கற்கும் பல தம்பிகளுக்கு இன்றும் அண்ணனாய் நினைவில் வாழ்பவர் என்று பதிவிட்டுள்ளார்.
unknown node