பிக்பாஸ் போல 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன் – அமைச்சர் ஜெயக்குமார்.!
ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டுஅவரது திருவுருவப் படத்திற்கு ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சமீபத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரசு கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற தவறிவிட்டது என விமர்சனம் செய்து இருந்தார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பியபோது, தமிழகத்தில் கொரோனா பரவல் தொடங்கி 150 நாட்கள் மேல் ஆகி விட்டன. “பிக் பாஸ்” வீட்டில் 100 நாட்கள் உள்ளே இருந்துவிட்டு வெளியே வருபவர்களுக்குப் பரிசுப் பணம் வழங்கப்படும். “பிக் பாஸ் -3” க்கு சோதனையாகத்தான் அவர் உள்ளே இருக்கிறார்.
150 நாட்களுக்கு மேலாக நாங்கள் மக்களைச் சந்தித்து களப்பணியாற்றுகிறோம். ஆனால், அவர் எப்போதாவது வெளியில் வந்தாரா..? என கூறினார்.