கமல் குறித்து உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.
கமல் கருத்து:
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், நான் சட்டசபைக்கு வந்தால் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வரமாட்டேன். அப்படியே வந்தாலும் வேறு சட்டையை மாட்டிக் கொண்டு வருவேன்.
முழுநேர அரசியல்வாதியாக யாரும் இருக்க முடியாது. அரசியலையே நம்பி வருவோர் நாட்டை சுரண்டுவார்கள்.
கிராமசபை கூட்டம் எத்தனை வருடமாக உள்ளது என்பது கூட தெரியாதா?. சின்ன பையன் அரசியலுக்கு வந்தபின்பு அதனை அப்படியே காப்பி அடிப்பது சரியா? .கட்சியை தொடங்கிவிட்டு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என சொல்வது முறையல்ல.
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அது தமிழகத்தை பாதிக்கும்.திமுகவை நான் கடுமையாக விமர்சிக்க திமுகவே காரணம். மறைமுகமாக அல்ல நேரடியாகவே திமுகவை விமர்சிக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
கமல்ஹாசன் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திமுகவை விமர்சனம் செய்தார்.இது திமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலின் பதில் கருத்து:
பின் கமலின் விமர்சனத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து கமல் பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது. கமலின் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் .கிராமசபை கூட்டத்தை திமுக நீண்ட காலமாக நடத்தி வருகிறது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.அதில் கிராம சபைக் கூட்டத்தை நான் தான் கண்டு பிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…