ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, கடினமான நேரங்களில் அவருடன் நிற்பதாக கமல்ஹாசன் ட்வீட்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மோடி குடும்பப்பெயர் குறித்து அவதூறாக பேசியதாக புர்னேஷ் மோடி என்பவர் தொடர்ந்த வழக்கில் சூரத் நீதிமன்றம், ராகுலை குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு சூரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து, ராகுல்காந்திக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்வீட்டில், ராகுல்ஜி, இந்த கடினமான நேரத்தில் நான் உங்களுடன் நிற்கிறேன்! நீங்கள் அதிக சோதனை நேரங்களையும் நியாயமற்ற தருணங்களையும் பார்த்திருக்கிறீர்கள்.
நமது நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான உங்கள் மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்! சத்யமேவ ஜெயதே!! என்று தனது ட்வீட்டில் பதிவு செய்துள்ளார்.
பாரம்பரிய அரிசிகளில் ஒன்றான தூய மல்லி அரிசியின் மகத்துவம், அதன் ஆரோக்கிய நன்மைக பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
சென்னை : அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…